Sunday, August 31, 2014

For ebook lovers

சாரி அனைவருக்கும், எனது சிலபல சொந்த விடயங்களால் பதிவேற்ற முடியவில்லை.

இப்ப நாம பார்க்கப்போவது E-Book reader. பொதுவாக இப்ப எல்லோரும் பெரிய பெரிய ஸ்க்ரீன் உள்ள மொபைல் தான் வச்சிருக்காங்க, அதுல புக் படிக்கனும்னு நினைக்கறவங்களுக்கான் சாப்ட்வேர். இதுல நிறைய நிறைய எழுதி உங்க டைம வேஸ்ட் பண்ண விரும்பல.

இது நல்ல சாப்ட்வேர், epub, pdf, cbr னு பல பார்மட் அ சப்போர்ட் பண்ணும், ட்ரை திஸ்.

இது ஃப்ரி வெர்சன் https://play.google.com/store/apps/details?id=com.flyersoft.moonreader&hl=en

அட்-ப்ரி வெர்சன் ஒன்னு இருக்கு அது பெய்ட் ஒன்.

Wednesday, July 30, 2014

Symbols Keyboard and TextArt

ஓர்குட்(Orkut)க்கு நாம பை பை சொல்லி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் அதுல நாம எழுதுன testimonials, அப்லோடின pictures மற்றும் இன்ன பிற இத்யாதி இத்யாதிக்களெல்லாம் நாம டவுன்லோட் பண்ணிக்க டைம் கொடுக்கப்பட்டிருக்கு.

சரி நாம இப்ப எதுக்கு இத பத்தி பேசிட்டு இருக்கோம் அப்படினா, நாம அனுப்புன Scraps, or messages, or testimonials இதுல எல்லாத்தயும் differentஅ அனுப்பி impress பண்ண ட்ரை பண்ணப்ப சிலபல ஜிகினா தகிடுதத்தம் எல்லாம் தத்தம் வழியில பண்ணோம், அதுல ஒரு வழி தான் font modify பண்ணி அனுப்புன விசயங்கள் like UPSIDE DOWN, SYMBOLS அப்புறம் இந்த ஆட்டின் (heart)மாதிரி சிம்பல்ஸ்லாம் சிம்பிளா ஆட்டய போட்டு பண்ணின விசயங்கள். இப்ப அது நமக்கு androidலயும் கிடைக்குது.

பண்ண வேண்டியதெல்லாம் இந்த app டவுன்லோடு பண்ணுங்க. இது ஃப்ரீ வெர்சன் தான், பெய்ட் வெர்சன் அவைலபிள்..

https://play.google.com/store/apps/details?id=com.mobisters.textart.free&hl=en


Tuesday, July 29, 2014

IMAGE 2 WALLPAPER

Customising a wallpaper on Android devices would be a tough task. 

அப்பப்ப கொஞ்சம் ஆங்கிலம் வந்துடுது, மன்னிச்சூ!!!

இந்த ஆஃப் புதிதாக காதலில் விழுந்தவங்களுக்கும், விழுந்து கால்கட்டு போட்டவங்களுக்கும், அப்புறம் புதிதாக குழந்தை பிறந்தவங்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். 

இதுல சிறப்பம்சம் என்ன அப்படினா.....!!!!
நம்ம எடுத்த அல்லது டவுன்லோடு செஞ்ச சில போட்டோவ ஸ்க்ரீன்ல வச்சு அழகு பாக்கலாம்னு பார்த்தா, உதாரணமா நஸ்ரியா போட்டோல இருக்க faceஅ செட் பண்ணலாம்னு பார்த்தா அது baseஅ காட்டும். அந்த மாதிரி இல்லாம exact-அ செட் பண்ண this app will be very useful and use full space.

ரொம்ப எளிதான ஆப்சன்ஸ். ஆட்டோமேடிக் ஆப்சன்ல உங்களுக்குப் பிடித்த மாதிரி இல்லனா, நீங்க மேனுவல் ஆக யூஸ் பண்ணிக்கலாம்

https://play.google.com/store/apps/details?id=com.shirobakama.wallpaper

Monday, July 28, 2014

WhatsApp +

WhatsApp பத்தி எங்களுக்கு தெரியாதா, அதுக்கு எதுக்கு இப்ப ஒரு பதிவுனு கேட்காம, அப்படியே ஜருகண்டி ஜருகண்டி, இது WhatsApp+ பத்தின பதிவு.

WhatsApp பத்தின டீடெய்ல்ஸ் உங்களுக்கு ரொம்ப டீடெய்ல தெரியும்ங்குறதால, WhatsApp plusல இருக்கத பத்தி மட்டும் சொல்றேன். இதுல ஒன்னும் பெருசா வித்தியாசம் இல்லங்க (ஙே....!) இதுல நீங்க 

  1. themes install பண்ணிக்கலாம். 
  2. Status மெயின் சாட் ஸ்க்ரீன்லே தெரியும்.
  3. Emoji நிறைய இருக்கும் 
  4. ஆன்லைன் ஸ்டேடஸ் ஆப் பண்ணிக்கலாம்.
  5. ஃபேஸ்புக்ல கமெண்ட் போடுற மாதிர் funny pictures அனுப்பனும்னா இதுல டிரெக்டா அனுப்பறதுக்கு send optionக்கு பக்கத்திலே ஒரு போல்டர் ஆப்சன் இருக்கும், அதுல இமேஜஸ் சேவ் பண்னிடுங்க, அப்புறம் இந்த ஆப்சன வச்சே, நாம ஆப்பரேசன் பண்ணிடலாம் நம்ம ப்ரெண்ட்ஸ..


to download goto this link : http://www.whatsapp-plus.net/download.php

SHADOW FIGHT 2

அதிஅற்புதமான ஒரு கேம்..

SHADOW FIGHT 2 இந்த கேம், Nekki டெவலப்பர்ஸ்ல இருந்து வந்துருக்கும் அசத்தலான கேம். இதுக்கு முன்னாடி Vectorனு ஒரு சேஸிங் கேம் போட்ருந்தாங்க. அதுவே விளையாட செம்மையா இருந்தது. அத விட இது சேட்டையா இருக்கு.

இந்த கேம் பத்தின சின்ன narration, தொடக்கத்துல ஒரு trailerஅ வந்துடும். இருந்தாலும் சின்னதா சொல்லிடுறேன். அழிஞ்சுபோன சாம்ராஜ்யத்துக்காக போராடுற ஒரு சாமுராய்.


அதுவும் இந்த கேம் free ய கிடைக்குது (tamil ah free ah nu adicha adhu venam vitrunga) சிம்பிள் கேமிங் கண்ட்ரோல், ஆனா ரிச் கிராபிக்ஸ்-னு அசத்தலா இருக்கு.

என்ன சின்ன குறை அப்படினா, எல்லா ட்ரிக்ஸும் அந்த ஒரே கண்ட்ரோல இருக்கதால, நமக்கு பழக கொஞ்சம் நாள் எடுத்துக்கும் (அதுக்கப்புறம் கும்கி பட ஜோசியர் சொல்ற மாதிரி அப்படியே பழகிறும்)


உங்களோட ப்ரொக்ரெஸ வச்சி சில ஆயுதங்கள நீங்க unlock பண்ணிக்கலாம், அப்படி இல்லனா you have to watch or install few offers you can found inside of the app.  அது ஒன்னு தான் ஃட்ராபேக். மத்தபடி தாறுமாறு. 

இங்க இருக்கு லிங்க் https://play.google.com/store/apps/details?id=com.nekki.shadowfight&hl=en

Sunday, July 27, 2014

Stick Cricket

அனைவருக்கும் வணக்கம் !!!

காதலுக்கு மட்டுமல்ல!! நம்மளோட குறும்புதனத்துக்கும், விளையாட்டு எண்ணங்களுக்கும் கூட அவ்வளவு சீக்கிரம் வயசாகுறது கிடையாது!! அதனால தான் என்னவோ BRICK GAMEல இருந்து PC, PLAYSTATION, MOBILE, TABLETனு எல்லா devicesலயும் கேம் ஆடிட்டே இருக்கோம்..

இந்தியா-ல இருக்க எல்லோரும் அட்லீஸ்ட் ஒரு தடவையாவது க்ரிக்கெட் ஆடாம இருந்துருக்க மாட்டோம் (நீங்க ஆடாம இருந்த ப்ரீயா விடுங்க). பவுலிங் போட தெரியாம த்ரோ அடிச்ச காலத்துல இருந்து டி20 காலம் வரைக்கும் நம்ம இன்னும் ஆடிக்கிட்டு இருப்போம் (அல்லது அத பத்தி நினைச்சு பார்த்துட்டாவது இருப்போம்னு வைங்க!! என்னை மாதிரி)

அந்த குறைய தீர்க்க தான் இந்த கேம்
STICK CRICKET
https://play.google.com/store/apps/details?id=com.sticksports.stickcricket&hl=en

ரொம்ப பெரிய க்ரிக்கெட் ரசிகரா அல்லது Harsha Bhogle வ இருக்கனும்னு அவசியம் இல்ல இந்த கேம் விளையாட. ஸ்க்ரீன்ல தெரியற இரெண்டே பட்டன் தான், எந்த பக்கம் அடிச்சா போகும்னு guess பண்ணி press பண்ணுங்க. அவ்ளோதான்.
நீங்க Chris Gayle மாதிரி விளையாடலாம், நான் 20 பாலில் 100 ரன் அடிச்சேன். 
நீங்க ட்ரை பண்ணுங்க

பை த பை, இந்த கேமோட தாரக மந்திரமே (அதாங்க tag line) HIT OUT or GET OUT. அப்படினா கேம் எப்படினு நீங்களே பார்த்துக்கங்க..

SwiftKey Keyboard

ஆன்ராய்டு பயனாளிகளுக்கு ஒர் நற்செய்தி..
Keyboard உலகின் முடிசூடா மன்னனான SwiftKey Keyboard, நிறுவனம் தனது paid version மென்பொருளை இலவசமாக தர முடிவெடுத்துள்ளது.
அதற்கான காரணம் ஆகச்சிறந்தது, தான் வைத்த இலக்கை அந்த நிறுவனம் அடைந்து விட்டதாகவும், அதன்மூலம் போதிய வருவாய் ஈட்டி விட்டதாலும், அம்மென்பொருளை இலவசமாகவே எல்லாருக்கும் கிடைக்க முயற்சி செய்து விட்டது.

SwiftKeyன் சிறப்பம்சங்கள்.
Swype செய்தாலே டைப் ஆகும் வசதி
கீபோர்டை floating மூலம் ஸ்க்ரீனில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளும் வசதி.
Full, thumb, compact என்று மூன்று வகையில் பயன்படுத்திக் கொள்ளாலாம்.
English grammatical suggestion would be perfect here. 
உதாரணமாக, நீங்கள் I என டைப் செய்தால் am have என அடுத்து வரும் auxilary verbs suggestionல் இருக்கும், நீங்கள் அதை க்ளிக் செய்தாலே, அந்த வார்த்தை அங்கு வந்துவிடும்
emoji support கூட இருக்கு

Evernote- for everyone who takes notes

Evernote
குறிப்பு எடுத்துக்கொள்வது, அல்லது நாம் வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைத்துக்கொள்வது என தற்காலிக வேலைகளாகட்டும், அல்லது நமக்கு மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்வதாகட்டும், இந்த evernote மென்பொருள் மிகச்சிறந்தது.

இந்த Evernote கணிணி, ஆன்ராய்டு, ஆப்பிள் ஐஓஸ் ஆகிய இயங்குதளங்குகளிலும் இயங்குகிறது. Cloud Storage தொழில்நுட்பத்தை சார்ந்தது. உதாரணமாக, உங்கள் மொபைலில் நீங்கள் சேமிக்கும் ஒரு விடயமானது, அந்ந நொடியிலே உங்களது கணிணியில் (நீங்கள் அந்த மென்பொருளை அதில் நிறுவியிருந்தால்)அதிலும் பதிவாகிவிடும்.
புகைப்படம், ஆடியோ பதிவு, உட்பட பலவற்றை நீங்கள் இதில் பதிவிடலாம். இவையனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது.
பயனுறுங்கள்....

Friday, July 25, 2014

INTRODUCTION

தமிழ்கூறு நல்லுலகுக்கு வணக்கம்!!

நான் யாரு எவருனு சொல்லி ஜல்லியடிக்க விரும்பல!!!
https://twitter.com/i_Anon_says
facebook.com/agananth
இது போதும்னு நினைக்கிறேன்.

என் நண்பர் சிவராமன் விஜயகுமார் தான் இதுக்கு காரணம். ஒருநாள் நாங்க எதார்த்தமா பேசிகிட்டு இருந்தப்ப, தல ஏன் ஆன்ராய்ட் பத்தி ஒரு ப்லாக் ஆரம்பிக்க கூடாதுனு கேட்டாரு. அடிப்படையில நாங்க இரண்டு பேரும் ஆங்கில இலக்கிய மாணவர்கள். நான் உடனே ஜெர்க் ஆகி ஏன் தலனு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு “ஆன்ராய்டு அப்படினாலே பல பேரு ஆங்க்ரி பேர்ட் ஓடே நின்னுடுறாங்க. அத தாண்டி பல விஷயங்கள் இருக்கு நீங்க கொஞ்சம் அத பகிரலாமே மத்தவங்க கிட்ட அப்படினு சொன்னாரு.

அப்படி விளையாட்ட ஆரம்பிச்ச விசயம் தான் இது but இந்த ப்லாக் விளையாட்டு இல்ல.

very soon, I am gonna handpick few among my friends to help others through helping me.

இணைந்திருங்கள் இணையத்தோடும், இதயத்தோடும்..
நன்றிகளுடனும், ஆன்ராய்டு சாஃப்ட்வேருடனும்
Arnoldனு சொன்னா நம்பவா போறீங்க
ஆனந்த்...