Saturday, January 9, 2021

New WhatsApp Update Policy

If you get something for free,  then you're the price."

இணைய உலகத்துல இலவசமா கிடைக்குற எதுவும் இலவசம் கிடையாது. ஏதோ ஒரு  வகைல அதுக்கான விலை கொடுத்தே ஆகனும். 

WhatsApp அப்படிங்குற ஒரு மென்பொருள்,  Facebook வாங்குறதுக்கு முன்னாடி ஒரு 50 பேர் மட்டும் work பண்ணிட்டு இருந்த ஒரு சின்ன நிறுவனம். பெரிய லாபம் எதிர்பார்க்காம வருடத்துக்கு 1$ (இந்திய மதிப்புல 50₹)  வசூலிச்சுட்டு இருந்தாங்க, 2009 ல இருந்து 2013 வரைக்கும் அந்த வருடாந்திர கட்டணம் இருந்துச்சு. அதுக்கப்புறம் இலவசமாகிடுச்சு. அதுக்கு மக்கள்கிட்ட இருந்த ஆதரவு மூலமா 200 மில்லியன் யூசர்கள் (1 மில்லியன் = பத்து லட்சம், கணக்கு போட்டுக்கோங்க) அதுக்கப்புறம் தான் Facebookஓட entry. 

2014ல் 19 Billion ( 1 Billion = நூறு கோடி) இன்னைக்கு வரைக்கும் Facebook வாங்கின கம்பெனிகளிலே இதுக்கு தான் அதிக விலை கொடுத்து வாங்கிருக்காங்க. 1 Billionக்கு தான் Instagram-அ வாங்கினாங்க Facebook, அதும் 2013ல. அப்பவே WhatsApp users மேல ஒரு கண்ணு இந்த Facebookக்கு. 

Facebook, வாட்சப்ப வாங்கின கொஞ்ச நாளிலே நிறைய users WhatsAppஅ uninstall பண்ணிட்டாங்க. அந்த சமயத்துல 80 லட்சம் பேர் Telegramல ஜாய்ன் பண்ணிட்டாங்க. (அப்பவே டெலிகிராம் வேற லெவல், ஆனா வாட்சப் மாதிரி ஈஸியான யூசர் இண்டர்ஃபேஸ் இல்ல, ஆனா நிறைய Safety and Privacy இருந்துச்சு, இருக்கு). Netiquette அப்படிங்குற internet do's and don'ts தெரிஞ்சவங்களுக்கு WhatsAppஒட தகிடுதத்த வேலைகள் தெரியும், அதனால அத பெரும்பாலும் பயன்படுத்த மாட்டாங்க ( நான் என்னோட வேலை சார்ந்து பயன்படுத்துற மாதிரி இருக்கு, எல்லோருக்கும் அதே தான்). நீங்க Google பண்ணாக்கூட சரியா கிடைக்காத நிறைய விசயங்கள் உங்களுக்கு WhatsApp மூலமா Facebookக்கு போயிட்டு உங்களுக்கே அது விளம்பரமா வரும்.  இது தான் Facebook கொண்டு வர இருக்க Ecosystem. நீங்க என்ன பேசுறீங்க, யாரோட பேசுறீங்க, என்ன ஃபோட்டோ அனுப்புறீங்க? அப்படிங்குறது எல்லாம் உங்க போன்ல டெலிட் ஆகிட்டா கூட பத்திரமா Facebook தங்களோட serverல வச்சிருப்பாங்க. நீங்க அடிச்சுக்கேட்டா கூட சொல்லமாட்டாங்க( உங்க கிட்ட மட்டும்), அவங்க அவங்களோட வியாபரத்துக்காக WhatsApp Business, Instagram மாதிரியான ஒரு 78 companies கிட்ட உங்களோட ஃபோன் நம்பர், அக்கவுண்ட் டீடெய்ல்ஸ், என்ன பேசிக்குறீங்க அப்படி எல்லாத்தயும் உங்க அனுமதியோட (?!?!?!) கொடுக்கப்போறாங்களாம். அதுக்கு தான் நீங்க Acceptனு கொடுக்கனும்னு Mark சொல்றான். 

என்னென்ன திருட போறாங்க???? அச்சோ என்னென்ன கவனிக்க போறாங்க

• ஒரு நாளைக்கு நீங்க எவ்வளவு நேரம் பயன்படுத்துறீங்க? 
• உங்களுடைய லொக்கேஷன்
• நீங்க யாருக்கு பணம் அனுப்புறீங்க? 
• உங்க போன் என்ன கம்பெனி, எந்த நெட்வொர்க், உங்க IP address 

இத மட்டும் தான் எடுத்துப்போம்னு சொல்வாங்க. 

நம்புனா நீங்க February 8 க்கு அப்புறமும் WhatsApp யூஸ் பண்ணலாம், இல்லனா வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா அப்படினு சொல்றான் மார்க். 

((நீங்க ஸ்டோரேஜ் ஆப்ஷன் எல்லாம் allowed கொடுத்துருப்பீங்க, அது இல்லாட்டி உங்களால போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணமுடியாது. )) இப்போதைக்கு உங்களுக்கு ஏதாவது pop-up வந்தா Agree கொடுக்காதீங்க

இந்த  Updated policy  பத்தி முதல்ல என்னோட நண்பன் Sarvan தான் என் கிட்ட சொன்னான், WhatsAppல ஏதோ User Policy update வருதாமேனு! நான் சிரிச்சுக்கிட்டே அவன்கிட்ட சொன்னேன், இவ்வளவு நாள் அது தானே மறைமுகமா பண்ணானு. 

அது தான் உண்மையும் கூட, You were being monitored for the whole time. வாட்சப்ப நீங்க முதல்ல பயன்படுத்துறப்ப ஒரு OTP நம்பர் கேட்ருக்கும். நீங்களும் நம்பி allow கொடுத்த Permission-அ அப்படியே மறந்துருப்பீங்க. அது இன்னைக்கு வரைக்கும் இருக்கும். நம்பலனா நீங்க உங்க போன்ல settings-Apps-Whatsapp- ல போயிட்டு செக் பண்ணுங்க. ஒரு மெசேஜிங் ஆஃப் எதுக்கு உங்க SMS  எல்லாம் தேவை??? 
Cambridge Analytica அப்படிங்குற வார்த்தைய google பண்ணி பாருங்க, Facebookக்கும் அவங்களுக்கும் இடையிலே some dark business regarding election had happened. 

Facebook பயன்படுத்துறது தப்பில்ல, ஆனா Facebook நம்மள பயன்படுத்துக்கிற அளவுக்கு நம்ம மாறிடக்கூடாது. அவர யாரும் கண்காணிக்க கூடாதுனு தலைவர் மார்க் எவ்வளவு நேக்கா தன்னுடைய லேப்டாப்-ல மைக், கேமராவ டேப் போட்டு வச்சுருக்காருனு பாருங்க.  




அப்ப என்ன தான் பண்றதுனு யோசிக்குறவங்களுக்கு, இருக்கவே இருக்கு

Telegram

என்ன வேணும் உங்களுக்கு, Movies, Series, Books எல்லாம் இங்க இருக்கு. Privacy  பத்தி கேட்குறவங்களுக்கு உங்க போன் நம்பர் வச்சுருக்கவங்க கூட உங்கள இங்க நம்பர் வச்சு தேடமுடியாது. (சொந்தக்காரங்க கிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம்)


Signal 

Edward Snowden - CIA க்காக வேலை பாத்துட்டு தன்னோட அமெரிக்க அரசாங்கம் பொதுமக்களோட அன்றாட வாழ்க்கையை கூட ஒட்டுக்கேக்குதுனு சொல்லி அமெரிக்கா அரசாங்கம் இன்னும் அவர தேடிட்டு இருக்கு. அப்படிப்பட்ட ஒரு Whistleblower இந்த ஆப் ரொம்ப சேஃப்னு சொல்லிருக்காரு, இதுக்கு மேல வேற என்ன வேணும். இதுல பெரிய featuresநு எதும் இல்ல. ஆனா Safety நிறையவே இருக்கு. 


Elon Musk, பவுண்டர் ஆஃப் Tesla, and the richest man of the world at the time of typing this, அவரும் சப்போர்ட்டட் signal.



இது ரெண்டும் நல்ல and best replacement for WhatsApp. 

சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.

One more image to praise signal


See you in next post

𝘼𝙣𝙖𝙣𝙩𝙝 𝘼 𝙂



Sunday, December 27, 2020

அன்ரொயிட் மொபைலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இந்தியால டாய்லெட் இல்லாத வீடுகள கூட பாக்கலாம் ஆனால் ஆன்ட்ராய்ட் போன் இல்லாத வீடுகள பாக்குறது ரொம்ப கஷ்டம். மற்ற நாடுகள் மாதிரி இல்லாம இங்க டேட்டாவோட விலை ரொம்ப கம்மி (உலகத்துலே இந்தியால தான் கம்மி, 6 ரூபாய்க்கு 1ஜிபி கொடுக்குறாங்க, அமெரிக்கால ஒரு ஜிபி நெட்க்கு நீங்க 8 டாலர் கொடுக்கனும், அதாவது 580 ரூபாய்) இப்படி டேட்டா நிறைய, விலை கம்மினு கொடுத்தாலும் ஸ்பீட் இல்லனு  சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. விசயத்துக்கு வருவோம்.



போன் வாங்கின உடனே ஃபேஸ்புக், வாட்ஸப்னு இன்ஸ்டால் பண்ற நம்ம ஒரு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் பண்றது இல்ல. அதிகபட்சம் 1 MBல உங்க போன்ல இருக்க மொத்த நம்பர்ஸ்ல அடக்கி அப்லோட் பண்ணிர்லாம். அளவுக்கு அதிகமா டேட்டா இருக்கதலா நம்ம எவ்வளவு யூஸ் பண்றோம்னு கூட தெரியாம இருக்கது நம்மல்ல பல பேரு. டேட்டா தான் இப்ப மிகப்பெரிய பிஸினஸ். அதுல இருந்து முடிஞ்ச அளவுக்கு எப்படி உங்கள காப்பத்திக்குறதுங்குறது தான் இந்த பதிவு. 


முதல்ல ஒரு ஆன்ட்டிவைரஸ் 

AVAST ANTIVIRUS

 இத தான் நீங்க பயன்படுத்தனும்னு இல்ல. ஆனா ஒரு ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்துறது ரொம்ப நல்லது. முடிஞ்சா ப்ரோ வெர்ஷன் வாங்கிக்கோங்க இல்லாட்டி டெலிகிராம்ல தேடிப்பார்த்தா Mod வெர்ஷன்ஸ் கிடைக்கும். 

ஆன்ட்டிவைரஸ்ல என்ன பெனிபிட் அப்படினு பார்த்தோம்னா உங்க போன அன்லாக் பண்ண முயற்சி பண்றவங்களோட முகத்த உங்க போனோட front camera போட்டோ எடுத்து உங்க இமெயிலுக்கு அனுப்பிரும், வேற சிம் இன்ஸெர்ட் பண்ணா அந்த நம்பர்ல இருந்து உங்க ரெஜிஸ்டர்ட் மொபைலுக்கு மேசேஜ் வரும். 


கொஞ்சம் எக்ஸ்பெர்ட் திருடன் கிட்ட கிடைச்சா, உங்க போன் உங்களுக்கு இல்ல. 


Bouncer


ஒரு அட்டகாசமான அன்ரொயிட் ஆஃப்னா அது இது தான். நான் வாங்கினப்ப இந்த ஆஃப்போட விலை 200 ரூபாய். ஆனா வொர்த். இந்த ஆஃப் என்ன பண்ணும். நம்ம சில ஆஃப் இன்ஸ்டால் பண்ணதும் நிறைய பர்மிஷன்ஸ் கேட்க்கும், phone, storage, SMS, camera, அப்படி நிறைய. இன்ஸ்டால் பண்ணதும் அத நம்ம மறந்துருவோம். அதுமூலமா நம்ம கண்காணிக்கப்பட்டுட்டே இருக்கோம் அப்படிங்குறத மறந்துடுறோம். உதாரணத்துக்கு, உங்க போன்ல இருக்க settings- apps- whatsapp - permissions-ல செக் பண்ணி பாருங்க. SMS option வரைக்கும் இருக்கும். முதல் தடவை OTPக்காக கொடுத்த பெர்மிஷன் இன்னும் இருக்கும். இந்த மாதிரி நம்ம எப்பவோ கொடுத்த பெர்மிஷன்ஸ நம்ம மறந்து விட்டத ஆட்டோமெட்டிக்கா இந்த ஆஃப் ரீமுவ் பண்ணிடும். சில ஆஃப்க்கு நீங்க allow கொடுத்துட்டா இந்த ஆஃப் அத ரீமுவ் பண்ணாது. Worthy app. 


Access Dots



இதென்ன பண்ணும்???


உங்க போன்ல நீங்க ஒரு ஆஃப் பயன்படுத்துறப்ப உங்க கேமரா அல்லது மைக்ரோபோன பயன்படுத்துனா ஸ்க்ரீன்ல ஒரு டாட் மாதிரி தெரியும். இது பெண்களுக்கு ரொம்ப பயனுள்ள ஒரு ஆஃப். சில சாப்ட்வேர்ஸ் அவங்களுக்கே தெரியாம போட்டோ எடுக்குற மாதிரி இருக்கும்,  அந்த மாதிரி ஆஃப் இருந்தாலோ அது கேமரா அல்லது மைக் யூஸ் பண்ணாலோ இதுல தெரிஞ்சுடும். 



Google Find My Device


இத வச்சு உங்க போன் எங்க இருக்குனு கண்டுபிடிக்கலாம், அத யாரும் பயன்படுத்த முடியாத மாதிரி erase  பண்ணிடலாம், ஆனா தொலைஞ்சத கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் இதயும் தெரிஞ்சு வைச்சுக்கோங்க. 



Firefox Focus


இது ஒரு ப்ரவுசர். சேஃப்ட்டிக்கும் ப்ரவுசருக்கும் என்ன சம்பந்தம்னு எல்லாம் யோசிக்காதீங்க, நிறைய இருக்கு. நீங்க ப்ரவுஸ் பண்றது எல்லாம் cache மெமரிஸ்ல ஸ்டோர் ஆகி Googleக்கே போகும், Google அத base பண்ணி targeted adsனு நீங்க தேடின ஹெட்போன், ஷூ, சாப்பாடு இன்னும் பல விசயங்கள வச்சு உங்களுக்கு விளம்பரம் கொடுத்து சம்பாதிச்சுப்பாங்க. அதுக்கு உங்க search history, cache  தான் மூலதனம். ஆனா இந்த ப்ரவுசர்ல history and cache ஆட்டோமெடிக்கா டெலிட் ஆகிரும். ரொம்ப safe and secured one. 



இப்போதைக்கு அவ்வளவு தான். 


அடுத்த போஸ்ட்ட்ல சந்திப்போம். 


Ananth A G

Saturday, October 31, 2020

Apps for Movies and Series

 Lockdown அப்படிங்குற வார்த்தை நமக்கெல்லாம் ரொம்ப புதுசு, Demonetization மாதிரியே. இந்த காலத்துல பெரும்பாலான மக்கள் வீட்டிலே அடஞ்சு கிடக்காங்கனு சொல்ல ஆச தான். ஆனா உண்மை என்னன்னு உங்களுக்கே தெரியும், இருந்தாலும் வீட்ல இருக்கணும் நிறய படம், சீரிஸ் எல்லாம் பாக்கனும்னு நினைக்குற Couch Potatoesகளுக்கான சில பல ஆஃப்ஸ பத்தின ஒரு சின்ன ரைட்டப். 


Disclaimer: PIRACY is injurious to Artists. முடிஞ்ச அளவுக்கு ஒரிஜினல் கான்டென்ட்ஸ்க்கு சப்போர்ட் பண்ணுங்க. 



THOP TV 

    நிறைய பேருக்கு இந்த ஆஃப் பத்தி தெரிஞ்சுருக்கும், இருந்தாலும் இந்த Blog யாருக்கானதுனா முழுக்க முழுக்க Beginnersக்கானது, உங்களுக்கு இந்த ஆப் தெரிஞ்சுருந்தா cool. 

இது ஒரு complete package, இதுல பெரும்பாலும் நீங்க live channels பாக்கலாம். அதோட மட்டுமில்லாம Hotstar Premium + VIP கண்டெண்ட்ஸ் கூட பாத்துக்கலாம். App ஒப்பன் பண்றப்ப மட்டும் சின்ன சின்ன Advertisements வரும், அதுக்கப்புறம் முழுக்க முழுக்க நோ விளம்பரம்ஸ். App restrictions காரணமா screenshots எடுக்க முடியல. 


HD Streamz 

ஐபில் பாக்குறதுக்காக தான் இந்த ஆஃப் பயன்படுத்த ஆரம்பிச்சேன் இப்ப பயன்படுத்துறது இல்ல (காரணம் நான் CSK Fan) இது ஒரு பக்காவான ஆஃப் ஆனா அப்பப்ப மக்கர் பண்ணும். சர்வர் எர்ரர் காட்டும். தெறி-யான ஆஃப். உங்க டேட்டா குவாண்டிட்டிக்க ஏத்த மாதிரியான ரெஷலுயூசன் (க்வாலிட்டி) வச்சு பாக்கலாம். 20 ஓவர் பாத்தாலும் 300 MB மாதிரி சைஸூம் இருக்கு. 3 ஓவர் பாத்தாலும் 300 MB போற அளவுக்கும் க்வாலிட்டி இருக்கு. இந்த ஆஃப் தேடி கண்டுபிடிக்க முக்கியமான காரணம் RJ Balaji க்ரிக்கெட் கமெண்டரிகள் தான். 
 



FILMPLUS

இது முழுக்க முழுக்க International Movies and Seriesக்கான ஆஃப். இதுல நிறைய படங்கள், சீரிஸ்னு வித்தியாசமான அளவுகளில் கிடைக்கும். Stream/Download இரண்டுல எது உங்களுக்கு கன்வீனியண்டா இருக்குமோ அத choose பண்ணிக்கலாம். 
மேல பாத்திங்கன்னாலே உங்களுக்கு தெரியும் Movies, Seriesநு தனித்தனியா இருக்கு.


CINEHUB

FilmPlusக்கும் Cinehubக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. User Interface தவிர. எனக்கு பெர்சனலா CineHub பிடிக்கும் காரணம் UI தான். ஒரு மாதிரி Classy லூக் இருக்கும். நீங்களே பாருங்க.


இதுல இல்லாத app உங்களுக்கு தெரிஞ்சா கீழ கமெண்ட்ஸ் பாக்ஸல சொல்லுங்க. நான் யூஸ் பண்ணி பாத்துட்டு அதுக்கப்புறம் அப்டேட் பண்றேன். மேல இருக்க ஆஃப்ஸ் எல்லாம் நான் பயன்படுத்தி, பிடிச்சதால சொல்லிருக்கேன். நீங்களும் யூஸ் பண்ணி பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும். 


- Ananth



Tuesday, October 27, 2020

மீண்டும் ஒரு முதல்படி

ஏறத்தாழ ஏழு வருஷம் கழிச்சு ஒரு சின்ன reboot. Because இன்னும் அதுக்கான அவசியம் இருக்கு. நீங்க ஒரு Pro Android யூசரா இருந்தா தேவைப்படாது. (இது என்னனு புரியலனா உங்களுக்கானது தான் இந்த Blog). 

2014ல ஆரம்பிச்ச விசயம் அப்படியே இடைல நின்றுச்சி. அத இப்ப reboot பண்ணலாம்னு ஒரு சின்ன ஐடியா. இதுல என்னென்ன  பண்ணலாம்னா Customisation Tips and Tricks, Icon Packs, Applications, Games எல்லாத்தயும் பத்தி இங்க பதிவிடலாம்னு. Mod Appsகூட இருக்கு. Mod Apps என்றால் என்னனு தெரியலான கவலைப்பட வேண்டாம். உதாரணத்துக்கு Spotify ஒரு ஸ்ட்ரீமீங் ஆஃப், அதுல அடிக்கடி Ad எட்டிப்பாக்கும், ஆனா MODified Appல விளம்பரம் வராது. அந்த மாதிரி இருக்க appsகூட இங்க பதிவிடுவோம்னு ஐடியா இருக்கு. 


ஏன் வீடியோவ போடலாமேனு கூட யோசனை இருக்கு. ஆனா எதுக்கு உங்க டேட்டாவ அதுல வேஸ்ட் பண்ணனும், அதுக்கு இத கொஞ்சம் படிச்சுட்டு அந்த டேட்டால இங்க சொல்ற appஅ இன்ஸ்டால் பண்ணிக்கலாம்ல...


கொஞ்சம் கொஞ்சமா வருவோம்....


Sunday, August 31, 2014

For ebook lovers

சாரி அனைவருக்கும், எனது சிலபல சொந்த விடயங்களால் பதிவேற்ற முடியவில்லை.

இப்ப நாம பார்க்கப்போவது E-Book reader. பொதுவாக இப்ப எல்லோரும் பெரிய பெரிய ஸ்க்ரீன் உள்ள மொபைல் தான் வச்சிருக்காங்க, அதுல புக் படிக்கனும்னு நினைக்கறவங்களுக்கான் சாப்ட்வேர். இதுல நிறைய நிறைய எழுதி உங்க டைம வேஸ்ட் பண்ண விரும்பல.

இது நல்ல சாப்ட்வேர், epub, pdf, cbr னு பல பார்மட் அ சப்போர்ட் பண்ணும், ட்ரை திஸ்.

இது ஃப்ரி வெர்சன் https://play.google.com/store/apps/details?id=com.flyersoft.moonreader&hl=en

அட்-ப்ரி வெர்சன் ஒன்னு இருக்கு அது பெய்ட் ஒன்.

Wednesday, July 30, 2014

Symbols Keyboard and TextArt

ஓர்குட்(Orkut)க்கு நாம பை பை சொல்லி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் அதுல நாம எழுதுன testimonials, அப்லோடின pictures மற்றும் இன்ன பிற இத்யாதி இத்யாதிக்களெல்லாம் நாம டவுன்லோட் பண்ணிக்க டைம் கொடுக்கப்பட்டிருக்கு.

சரி நாம இப்ப எதுக்கு இத பத்தி பேசிட்டு இருக்கோம் அப்படினா, நாம அனுப்புன Scraps, or messages, or testimonials இதுல எல்லாத்தயும் differentஅ அனுப்பி impress பண்ண ட்ரை பண்ணப்ப சிலபல ஜிகினா தகிடுதத்தம் எல்லாம் தத்தம் வழியில பண்ணோம், அதுல ஒரு வழி தான் font modify பண்ணி அனுப்புன விசயங்கள் like UPSIDE DOWN, SYMBOLS அப்புறம் இந்த ஆட்டின் (heart)மாதிரி சிம்பல்ஸ்லாம் சிம்பிளா ஆட்டய போட்டு பண்ணின விசயங்கள். இப்ப அது நமக்கு androidலயும் கிடைக்குது.

பண்ண வேண்டியதெல்லாம் இந்த app டவுன்லோடு பண்ணுங்க. இது ஃப்ரீ வெர்சன் தான், பெய்ட் வெர்சன் அவைலபிள்..

https://play.google.com/store/apps/details?id=com.mobisters.textart.free&hl=en


Tuesday, July 29, 2014

IMAGE 2 WALLPAPER

Customising a wallpaper on Android devices would be a tough task. 

அப்பப்ப கொஞ்சம் ஆங்கிலம் வந்துடுது, மன்னிச்சூ!!!

இந்த ஆஃப் புதிதாக காதலில் விழுந்தவங்களுக்கும், விழுந்து கால்கட்டு போட்டவங்களுக்கும், அப்புறம் புதிதாக குழந்தை பிறந்தவங்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். 

இதுல சிறப்பம்சம் என்ன அப்படினா.....!!!!
நம்ம எடுத்த அல்லது டவுன்லோடு செஞ்ச சில போட்டோவ ஸ்க்ரீன்ல வச்சு அழகு பாக்கலாம்னு பார்த்தா, உதாரணமா நஸ்ரியா போட்டோல இருக்க faceஅ செட் பண்ணலாம்னு பார்த்தா அது baseஅ காட்டும். அந்த மாதிரி இல்லாம exact-அ செட் பண்ண this app will be very useful and use full space.

ரொம்ப எளிதான ஆப்சன்ஸ். ஆட்டோமேடிக் ஆப்சன்ல உங்களுக்குப் பிடித்த மாதிரி இல்லனா, நீங்க மேனுவல் ஆக யூஸ் பண்ணிக்கலாம்

https://play.google.com/store/apps/details?id=com.shirobakama.wallpaper