இந்தியால டாய்லெட் இல்லாத வீடுகள கூட பாக்கலாம் ஆனால் ஆன்ட்ராய்ட் போன் இல்லாத வீடுகள பாக்குறது ரொம்ப கஷ்டம். மற்ற நாடுகள் மாதிரி இல்லாம இங்க டேட்டாவோட விலை ரொம்ப கம்மி (உலகத்துலே இந்தியால தான் கம்மி, 6 ரூபாய்க்கு 1ஜிபி கொடுக்குறாங்க, அமெரிக்கால ஒரு ஜிபி நெட்க்கு நீங்க 8 டாலர் கொடுக்கனும், அதாவது 580 ரூபாய்) இப்படி டேட்டா நிறைய, விலை கம்மினு கொடுத்தாலும் ஸ்பீட் இல்லனு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. விசயத்துக்கு வருவோம்.
போன் வாங்கின உடனே ஃபேஸ்புக், வாட்ஸப்னு இன்ஸ்டால் பண்ற நம்ம ஒரு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் பண்றது இல்ல. அதிகபட்சம் 1 MBல உங்க போன்ல இருக்க மொத்த நம்பர்ஸ்ல அடக்கி அப்லோட் பண்ணிர்லாம். அளவுக்கு அதிகமா டேட்டா இருக்கதலா நம்ம எவ்வளவு யூஸ் பண்றோம்னு கூட தெரியாம இருக்கது நம்மல்ல பல பேரு. டேட்டா தான் இப்ப மிகப்பெரிய பிஸினஸ். அதுல இருந்து முடிஞ்ச அளவுக்கு எப்படி உங்கள காப்பத்திக்குறதுங்குறது தான் இந்த பதிவு.
முதல்ல ஒரு ஆன்ட்டிவைரஸ்
இத தான் நீங்க பயன்படுத்தனும்னு இல்ல. ஆனா ஒரு ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்துறது ரொம்ப நல்லது. முடிஞ்சா ப்ரோ வெர்ஷன் வாங்கிக்கோங்க இல்லாட்டி டெலிகிராம்ல தேடிப்பார்த்தா Mod வெர்ஷன்ஸ் கிடைக்கும்.
ஆன்ட்டிவைரஸ்ல என்ன பெனிபிட் அப்படினு பார்த்தோம்னா உங்க போன அன்லாக் பண்ண முயற்சி பண்றவங்களோட முகத்த உங்க போனோட front camera போட்டோ எடுத்து உங்க இமெயிலுக்கு அனுப்பிரும், வேற சிம் இன்ஸெர்ட் பண்ணா அந்த நம்பர்ல இருந்து உங்க ரெஜிஸ்டர்ட் மொபைலுக்கு மேசேஜ் வரும்.
கொஞ்சம் எக்ஸ்பெர்ட் திருடன் கிட்ட கிடைச்சா, உங்க போன் உங்களுக்கு இல்ல.
ஒரு அட்டகாசமான அன்ரொயிட் ஆஃப்னா அது இது தான். நான் வாங்கினப்ப இந்த ஆஃப்போட விலை 200 ரூபாய். ஆனா வொர்த். இந்த ஆஃப் என்ன பண்ணும். நம்ம சில ஆஃப் இன்ஸ்டால் பண்ணதும் நிறைய பர்மிஷன்ஸ் கேட்க்கும், phone, storage, SMS, camera, அப்படி நிறைய. இன்ஸ்டால் பண்ணதும் அத நம்ம மறந்துருவோம். அதுமூலமா நம்ம கண்காணிக்கப்பட்டுட்டே இருக்கோம் அப்படிங்குறத மறந்துடுறோம். உதாரணத்துக்கு, உங்க போன்ல இருக்க settings- apps- whatsapp - permissions-ல செக் பண்ணி பாருங்க. SMS option வரைக்கும் இருக்கும். முதல் தடவை OTPக்காக கொடுத்த பெர்மிஷன் இன்னும் இருக்கும். இந்த மாதிரி நம்ம எப்பவோ கொடுத்த பெர்மிஷன்ஸ நம்ம மறந்து விட்டத ஆட்டோமெட்டிக்கா இந்த ஆஃப் ரீமுவ் பண்ணிடும். சில ஆஃப்க்கு நீங்க allow கொடுத்துட்டா இந்த ஆஃப் அத ரீமுவ் பண்ணாது. Worthy app.
இதென்ன பண்ணும்???
உங்க போன்ல நீங்க ஒரு ஆஃப் பயன்படுத்துறப்ப உங்க கேமரா அல்லது மைக்ரோபோன பயன்படுத்துனா ஸ்க்ரீன்ல ஒரு டாட் மாதிரி தெரியும். இது பெண்களுக்கு ரொம்ப பயனுள்ள ஒரு ஆஃப். சில சாப்ட்வேர்ஸ் அவங்களுக்கே தெரியாம போட்டோ எடுக்குற மாதிரி இருக்கும், அந்த மாதிரி ஆஃப் இருந்தாலோ அது கேமரா அல்லது மைக் யூஸ் பண்ணாலோ இதுல தெரிஞ்சுடும்.
இத வச்சு உங்க போன் எங்க இருக்குனு கண்டுபிடிக்கலாம், அத யாரும் பயன்படுத்த முடியாத மாதிரி erase பண்ணிடலாம், ஆனா தொலைஞ்சத கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் இதயும் தெரிஞ்சு வைச்சுக்கோங்க.
இது ஒரு ப்ரவுசர். சேஃப்ட்டிக்கும் ப்ரவுசருக்கும் என்ன சம்பந்தம்னு எல்லாம் யோசிக்காதீங்க, நிறைய இருக்கு. நீங்க ப்ரவுஸ் பண்றது எல்லாம் cache மெமரிஸ்ல ஸ்டோர் ஆகி Googleக்கே போகும், Google அத base பண்ணி targeted adsனு நீங்க தேடின ஹெட்போன், ஷூ, சாப்பாடு இன்னும் பல விசயங்கள வச்சு உங்களுக்கு விளம்பரம் கொடுத்து சம்பாதிச்சுப்பாங்க. அதுக்கு உங்க search history, cache தான் மூலதனம். ஆனா இந்த ப்ரவுசர்ல history and cache ஆட்டோமெடிக்கா டெலிட் ஆகிரும். ரொம்ப safe and secured one.
இப்போதைக்கு அவ்வளவு தான்.
அடுத்த போஸ்ட்ட்ல சந்திப்போம்.
Ananth A G