If you get something for free, then you're the price."
இணைய உலகத்துல இலவசமா கிடைக்குற எதுவும் இலவசம் கிடையாது. ஏதோ ஒரு வகைல அதுக்கான விலை கொடுத்தே ஆகனும்.
WhatsApp அப்படிங்குற ஒரு மென்பொருள், Facebook வாங்குறதுக்கு முன்னாடி ஒரு 50 பேர் மட்டும் work பண்ணிட்டு இருந்த ஒரு சின்ன நிறுவனம். பெரிய லாபம் எதிர்பார்க்காம வருடத்துக்கு 1$ (இந்திய மதிப்புல 50₹) வசூலிச்சுட்டு இருந்தாங்க, 2009 ல இருந்து 2013 வரைக்கும் அந்த வருடாந்திர கட்டணம் இருந்துச்சு. அதுக்கப்புறம் இலவசமாகிடுச்சு. அதுக்கு மக்கள்கிட்ட இருந்த ஆதரவு மூலமா 200 மில்லியன் யூசர்கள் (1 மில்லியன் = பத்து லட்சம், கணக்கு போட்டுக்கோங்க) அதுக்கப்புறம் தான் Facebookஓட entry.
2014ல் 19 Billion ( 1 Billion = நூறு கோடி) இன்னைக்கு வரைக்கும் Facebook வாங்கின கம்பெனிகளிலே இதுக்கு தான் அதிக விலை கொடுத்து வாங்கிருக்காங்க. 1 Billionக்கு தான் Instagram-அ வாங்கினாங்க Facebook, அதும் 2013ல. அப்பவே WhatsApp users மேல ஒரு கண்ணு இந்த Facebookக்கு.
Facebook, வாட்சப்ப வாங்கின கொஞ்ச நாளிலே நிறைய users WhatsAppஅ uninstall பண்ணிட்டாங்க. அந்த சமயத்துல 80 லட்சம் பேர் Telegramல ஜாய்ன் பண்ணிட்டாங்க. (அப்பவே டெலிகிராம் வேற லெவல், ஆனா வாட்சப் மாதிரி ஈஸியான யூசர் இண்டர்ஃபேஸ் இல்ல, ஆனா நிறைய Safety and Privacy இருந்துச்சு, இருக்கு). Netiquette அப்படிங்குற internet do's and don'ts தெரிஞ்சவங்களுக்கு WhatsAppஒட தகிடுதத்த வேலைகள் தெரியும், அதனால அத பெரும்பாலும் பயன்படுத்த மாட்டாங்க ( நான் என்னோட வேலை சார்ந்து பயன்படுத்துற மாதிரி இருக்கு, எல்லோருக்கும் அதே தான்). நீங்க Google பண்ணாக்கூட சரியா கிடைக்காத நிறைய விசயங்கள் உங்களுக்கு WhatsApp மூலமா Facebookக்கு போயிட்டு உங்களுக்கே அது விளம்பரமா வரும். இது தான் Facebook கொண்டு வர இருக்க Ecosystem. நீங்க என்ன பேசுறீங்க, யாரோட பேசுறீங்க, என்ன ஃபோட்டோ அனுப்புறீங்க? அப்படிங்குறது எல்லாம் உங்க போன்ல டெலிட் ஆகிட்டா கூட பத்திரமா Facebook தங்களோட serverல வச்சிருப்பாங்க. நீங்க அடிச்சுக்கேட்டா கூட சொல்லமாட்டாங்க( உங்க கிட்ட மட்டும்), அவங்க அவங்களோட வியாபரத்துக்காக WhatsApp Business, Instagram மாதிரியான ஒரு 78 companies கிட்ட உங்களோட ஃபோன் நம்பர், அக்கவுண்ட் டீடெய்ல்ஸ், என்ன பேசிக்குறீங்க அப்படி எல்லாத்தயும் உங்க அனுமதியோட (?!?!?!) கொடுக்கப்போறாங்களாம். அதுக்கு தான் நீங்க Acceptனு கொடுக்கனும்னு Mark சொல்றான்.
என்னென்ன திருட போறாங்க???? அச்சோ என்னென்ன கவனிக்க போறாங்க
• ஒரு நாளைக்கு நீங்க எவ்வளவு நேரம் பயன்படுத்துறீங்க?
• உங்களுடைய லொக்கேஷன்
• நீங்க யாருக்கு பணம் அனுப்புறீங்க?
• உங்க போன் என்ன கம்பெனி, எந்த நெட்வொர்க், உங்க IP address
இத மட்டும் தான் எடுத்துப்போம்னு சொல்வாங்க.
நம்புனா நீங்க February 8 க்கு அப்புறமும் WhatsApp யூஸ் பண்ணலாம், இல்லனா வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா அப்படினு சொல்றான் மார்க்.
((நீங்க ஸ்டோரேஜ் ஆப்ஷன் எல்லாம் allowed கொடுத்துருப்பீங்க, அது இல்லாட்டி உங்களால போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணமுடியாது. )) இப்போதைக்கு உங்களுக்கு ஏதாவது pop-up வந்தா Agree கொடுக்காதீங்க
இந்த Updated policy பத்தி முதல்ல என்னோட நண்பன் Sarvan தான் என் கிட்ட சொன்னான், WhatsAppல ஏதோ User Policy update வருதாமேனு! நான் சிரிச்சுக்கிட்டே அவன்கிட்ட சொன்னேன், இவ்வளவு நாள் அது தானே மறைமுகமா பண்ணானு.
அது தான் உண்மையும் கூட, You were being monitored for the whole time. வாட்சப்ப நீங்க முதல்ல பயன்படுத்துறப்ப ஒரு OTP நம்பர் கேட்ருக்கும். நீங்களும் நம்பி allow கொடுத்த Permission-அ அப்படியே மறந்துருப்பீங்க. அது இன்னைக்கு வரைக்கும் இருக்கும். நம்பலனா நீங்க உங்க போன்ல settings-Apps-Whatsapp- ல போயிட்டு செக் பண்ணுங்க. ஒரு மெசேஜிங் ஆஃப் எதுக்கு உங்க SMS எல்லாம் தேவை???
Cambridge Analytica அப்படிங்குற வார்த்தைய google பண்ணி பாருங்க, Facebookக்கும் அவங்களுக்கும் இடையிலே some dark business regarding election had happened.
Facebook பயன்படுத்துறது தப்பில்ல, ஆனா Facebook நம்மள பயன்படுத்துக்கிற அளவுக்கு நம்ம மாறிடக்கூடாது. அவர யாரும் கண்காணிக்க கூடாதுனு தலைவர் மார்க் எவ்வளவு நேக்கா தன்னுடைய லேப்டாப்-ல மைக், கேமராவ டேப் போட்டு வச்சுருக்காருனு பாருங்க.
அப்ப என்ன தான் பண்றதுனு யோசிக்குறவங்களுக்கு, இருக்கவே இருக்கு
Telegram
என்ன வேணும் உங்களுக்கு, Movies, Series, Books எல்லாம் இங்க இருக்கு. Privacy பத்தி கேட்குறவங்களுக்கு உங்க போன் நம்பர் வச்சுருக்கவங்க கூட உங்கள இங்க நம்பர் வச்சு தேடமுடியாது. (சொந்தக்காரங்க கிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம்)
Signal
Edward Snowden - CIA க்காக வேலை பாத்துட்டு தன்னோட அமெரிக்க அரசாங்கம் பொதுமக்களோட அன்றாட வாழ்க்கையை கூட ஒட்டுக்கேக்குதுனு சொல்லி அமெரிக்கா அரசாங்கம் இன்னும் அவர தேடிட்டு இருக்கு. அப்படிப்பட்ட ஒரு Whistleblower இந்த ஆப் ரொம்ப சேஃப்னு சொல்லிருக்காரு, இதுக்கு மேல வேற என்ன வேணும். இதுல பெரிய featuresநு எதும் இல்ல. ஆனா Safety நிறையவே இருக்கு.
Elon Musk, பவுண்டர் ஆஃப் Tesla, and the richest man of the world at the time of typing this, அவரும் சப்போர்ட்டட் signal.
இது ரெண்டும் நல்ல and best replacement for WhatsApp.
சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.
One more image to praise signal
See you in next post
𝘼𝙣𝙖𝙣𝙩𝙝 𝘼 𝙂
Super ji. Informative one 🙏🙏
ReplyDeleteSuper
ReplyDeleteSuper information
ReplyDelete